WC Super 8 – ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.
செயின்ட் லூசியாவில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியாவுடன் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர்.
இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.”,
இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் சார்பில் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர்.
இந்த ஜோடியில் டேவிட் வார்னர் 6 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்ததாக டிராவிஸ் ஹெட்டுடன், மிட்செல் மார்ஸ் ஜோடி சேர்ந்தார்.
அதிரடியாக ரன்கள் குவித்த இந்த ஜோடி அணியின் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தியது.
மறுமுனையில் அதிரடி காட்டிக் கொண்டிருந்த டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
அடுத்ததாக ரன் வேட்டையை தொடர்ந்துகொண்டிருந்த டிராவிஸ் ஹெட், பும்ரா பந்துவீச்சில் 43 பந்துகளில் 4 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 76 ரன்களில் கேட்ச் ஆனார்.
இறுதியில் பேட் கம்மின்ஸ் 11 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 4 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் ஆஸ்திரேலியா அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது.