ஜப்பானில் பரவி வரும் பக்டீரியா தொடர்பில் அச்சம் தேவையில்லை : இலங்கை மக்களுக்கு அறிவிப்பு!
ஜப்பானில் பரவி வரும் அரிய பாக்டீரியா தொற்று தொடர்பில் நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தலைவர் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இது சாமானிய மக்களுக்கு பொதுவான ஒரு பாக்டீரியா நிலை. அரிதாக, அதன் விளைவாக மற்றும் சிக்கலாக இது ஆபத்தானது.
சமீப காலமாக பாக்டீரியா நிலையால் ஏற்படும் சிக்கல்கள் அதிகரித்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இது சாத்தியமாகும். ஆண்டிபயாடிக்குகள் மூலம் இதை மாற்றலாம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
(Visited 4 times, 1 visits today)