இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டால் IMF இன் செயல்முறை பாதிக்கப்படும்!
சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கையில் தேர்தல் நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என இலங்கை தொடர்பான தூதுக்குழுவின் சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பில் இன்று (14.06) நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,எந்தவொரு நாட்டின் ஜனநாயகத்தையும் சர்வதேச நாணய நிதியம் மதிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டால் அது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் நேரத்தை பாதிக்கும் எனவும், உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து புதிய கால அட்டவணையை தயாரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் சிரேஷ்ட தலைவர் திரு. பீட்டர் ப்ரூவர் தலைமையில் செய்தியாளர் மாநாடு நடைபெற்றது.