இங்கிலாந்தில் அஞ்சல் கடிதத்தை தூக்கியெறிபவர்களா நீங்கள் : £200 அபராதம்!
இந்த பொதுத் தேர்தலில் தங்கள் வீட்டு வாசலில் வரும் கடிதத்தை தூக்கி எறிந்தால் அல்லது மறுசுழற்சி செய்தால் £200 அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என இங்கிலாந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கெய்ர் ஸ்டார்மர்ஸ் லேபர் முதல் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ்கள் வரை ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஜூலை 4ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் பிரச்சார உறுதிமொழிகளுடன் கூடிய தேர்தல் துண்டுப் பிரசுரங்கள் ஒவ்வொரு நாளும் லெட்டர்பாக்ஸ்கள் வழியாக வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
ஆனால் இந்த துண்டு பிரச்சுரங்களை நீங்கள் தவறவிடலாம். ஆனால் இது உங்களுக்கு பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும்.
அதாவது தபால் மூலம் வாக்களிப்பதற்கான சீட்டுகளும் இந்த லெட்டர் பாக்ஸ்கள் வழியாகத்தான் அனுப்பப்படும். அதனை நீங்கள் தவறவிடும் பட்சத்தில் தண்டனைக்கு ஆளாகுவீர்கள். இது சிவில் குற்றமாக கருதப்படுகிறது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1983-ன் கீழ், அஞ்சல் வாக்கு அல்லது பதிலாள் வாக்கு தொடர்பான தகவல்தொடர்புகளை விரும்பிய பெறுநருக்கு வழங்காமல் இருப்பது அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றமாகும்.
இதன்படி தேர்தல் செயல்முறையின் நேர்மை மற்றும் ரகசியத்தன்மையை உறுதி செய்வதற்காக தேர்தல் சீட்டுகளை பொதுத் தொட்டிகளில் அப்புறப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் அது பொது நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.