இலங்கையின் பல பகுதிகளில் கைவரிசை காட்டிய மிகப்பெரிய திருடனை சுற்றிவளைத்த பொலிஸார்

இலங்கையில் வீடுகளுக்குள் புகுந்து பணம், தங்கம், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்களை திருடிச் சென்ற ‘எகொடௌயன லாரா’ எனப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்த குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரால் திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் பதினான்கு இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதுடையவர் எனவும் அவர் எகொடௌயன மோதர ஜயகத்புர பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபர் 2023ஆம் ஆண்டு முதல் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(Visited 42 times, 1 visits today)