யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம்

அரியாலை கில்லாடிகள் 100 நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அரையிறுதி போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை அரியாலை சரஸ்வதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இப் போட்டியை ஆரம்பித்து வைப்பதற்காக நாட்டின் எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச,ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் உள்ளிட்டவர்கள் அதிதிகளாக சென்றிருந்தனர்.
இதன்போது இளைஞர்கள் மத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ, யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தில் ஒரு விளையாட்டு மைதானத்தை கட்டுவேன் என கூறியதுடன்,
தனது தந்தையைபோல் அரசாங்கத்தின் பணத்தில் அல்லாமல் தனது சொந்த பணத்திலும், நன்கொடையாளர்கள் மூலமாகவும் அதனை செய்து முடிப்பேன் எனவும் கூறினார்.
(Visited 31 times, 1 visits today)