சிங்கப்பூரில் இயங்கும் முதல் படகுச் சேவை – 200 பேர் பயணிக்கலாம்
சிங்கப்பூரில் Shell, Penguin நிறுவனங்கள் இணைந்து மின்சாரத்தில் இயங்கும் முதல் படகுச் சேவை அறிமுகம் செய்துள்ளது.
Shell நிறுவனம், சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையத்துடன் இணக்கக் குறிப்பொன்றில் கையெழுத்திட்டுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் படகுச் சேவை, தலைநிலத்துக்கும் புக்கோம் (Bukom) தீவுக்கும் இடையே செயல்படும்.
அந்தத் தீவில் உள்ள Shell நிறுவனத்தின் எண்ணெய்ச் சுத்திகரிப்பு, ரசாயன ஆலையில் பணிபுரியும் ஊழியர்களை அது ஏற்றிச் செல்லும்.
தீவில் அணையும்போது படகுகள் மின்னூட்டம் செய்யப்படும். சுமார் 6 நிமிடங்களில் அதிவேகமாக அவை மின்னூட்டப்படும். சராசரி மின் படகுகளைக் காட்டிலும் இதன் வேகம் ஏறத்தாழப் 10 மடங்கு அதிகம்.
டீசலைக் கொண்டு இயங்கும் படகுகளைவிட 2 மடங்கு வேகத்தில் இவை செயல்படக்கூடியவை.
இந்தப் படகில் 200 இருக்கைகள் இருக்கும். அதற்கென Shell நிறுவனம், 3 படகுகளை வாங்கியுள்ளது.
சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம், கரியமில வாயுவின் அளவைக் குறைக்கும் முயற்சியில் Shell நிறுவனத்தைத் தவிர்த்து வேறு 2 நிறுவனங்களுடனும் செயல்பட்டு வருகிறது.