ஜெர்மனியில் அமுலுக்கு வரும் தடை – பாடசாலை மாணவர்களுக்கு கட்டுப்பாடு
ஜெர்மனியில் சில உயர்தர பாடசாலைகளில் மாணவர்கள் கையடக்க தொலைப்பபேசி பாவணை தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாடசாலை வளாகத்தில் அதனை பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை ஒன்றின் அதிபர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சில பாடசாலைகளில் கையடைக்க தொலைபேசி பாவணைக்கான தடை நடைமுறையில் இருந்தன. பின்னர் தாம் தளர்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைக்கு வருகின்ற மாணவர்கள் இவ்வாறு இந்த கையடக்க தொலை பேசியை தமது வகுப்புக்களில் பயன்படுத்தும் பொழுது கல்வியில் நாட்டம் காட்டுவது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேற்கொண்ட நீண்ட கண்காணிப்பின் அடிப்படையில் இவ்வாறு தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுளளார்.
இந்ந நடைமுறை வெற்றியளிக்கும் பட்சத்தில் ஜேர்மன் முழுவதும் இந்த நடைமுறையை பாடசாலைகளில் அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இந்த நடைமுறை ஏற்கனவே பிரித்தானியா மற்றும் பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜெர்மனி இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.