கொலம்பியாவில் கடும் வறட்சி
கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தலைநகரில் சுமார் 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போதைய நிலைமை மேலும் மோசமாகும் என பொகோட்டாவின் மேயர் எச்சரித்துள்ளார்.
அதன்படி கொலம்பியாவின் தலைநகர் 09 பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வழமைக்கு மாறாக வறண்ட காலநிலை காரணமாக தலைநகரில் வசிப்பவர்களுக்கு ஒரு சொட்டு தண்ணீரை கூட வீணாக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தண்ணீர் வழங்கப்படுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
(Visited 4 times, 1 visits today)