கொலை மற்றும் மனித மாமிசம் உண்ணும் இங்கிலாந்து தம்பதியினர் கைது
இங்கிலாந்து போர்ன்மவுத்தில் உள்ள ஒரு தம்பதியினர், போதைப்பொருள் பாவனையாளரை கொலை, உறுப்புகளை சிதைத்தல் மற்றும் பகுதியளவு நரமாமிசம் உண்பது போன்ற குற்றங்களுக்காக விசாரணையில் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட 48 வயதான சைமன் ஷோட்டனின் உடல் பாகங்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.
டெபி பெரேரா மற்றும் பெஞ்சமின் அட்கின்ஸ் தம்பதியினர் ஷோட்டனைக் கொன்று பின்னர் ஒரு ஹார்டுவேர் கடையில் இருந்து ரம்பம் மூலம் அவரது உடல் உறுப்புகளை சிதைத்ததாக வழக்குத் தொடரப்பட்டது.
கடற்கரையில் பாதிக்கப்பட்ட நபரின் ஒரு கால் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களது வீட்டில் நடந்த சோதனையில் மேலும் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவரது போலீஸ் நேர்காணலில், பெரேரா கொலையில் பங்கை மறுத்தார், மேலும் அட்கின்ஸ் நரமாமிசத்தை ஒப்புக்கொண்டால் முழு குற்றத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். வழக்கு விசாரணை நடந்து வருகிறது.