கடந்த ஆண்டு அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி!
கடந்த ஆண்டு அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக Instagram உள்ளதென தெரியவந்துள்ளது.
Sensor Tower எனும் தகவல் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் அது தெரியவந்துள்ளது.
போன ஆண்டு Instagram செயலி 768 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது.
முந்தைய ஆண்டை விட அது 20 விழுக்காடு அதிகம். காணொளிகளுக்குப் பிரபலமான Tiktok செயலி 733 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது.
எண்ணிக்கை முந்தைய ஆண்டிலிருந்து 4 விழுக்காடு அதிகரித்ததாக Financial Times செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
தொடக்கத்தில் படங்களைப் பகிர்ந்துகொள்ளும் தளமாகத் தொடங்கிய Instagram, reels எனும் குறுகிய காணொளிகளைப் பதிவேற்றம் செய்யும் அம்சத்தை 2020இல் தொடங்கியது.
அந்த அம்சமும் சமூக ஊடகத் துறையில் Instagramஉக்கு இருக்கும் செல்வாக்கும் Tiktok செயலியைவிடச் சிறப்பாகச் செயல்பட உதவியதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.