அசாமில் 26 கோடி மதிப்புள்ள 90,000 போதைப்பொருள் மாத்திரைகள் பறிமுதல் – இருவர் கைது
அசாம்(Assam) மாநிலத்தில் உள்ள கச்சார்(Cachar) காவல்துறை 90,000 யாபா(Yaba) என்ற போதைப்பொருள் மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர், இதன் மதிப்பு ரூ.26 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பெரிய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் போது இரண்டு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிசோரமின்(Mizoram) சம்பாய்(Champhai) மாவட்டத்திலிருந்து குவஹாத்திக்கு(Guwahati) கடத்தல் பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு லாரியை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய பின்னர் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் கச்சார் மாவட்டத்தில் உள்ள தோலாய்(Tholai) பகுதியைச் சேர்ந்த தலிம் உதின் லஸ்கர்(Talim Uddin Laskar) மற்றும் அபேத் சுல்தான் பர்பூயா(Abed Sultan Parbuia) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாபா என்பது மெத்தம்பேட்டமைன்(methamphetamine) மற்றும் காஃபின்(caffeine) ஆகியவற்றின் கலவையாகும். தாய்லாந்தில்(Thailand) பைத்தியக்காரத்தனமான மருந்து(madness drug) என்று பொருள்படும் யாபா, பொதுவாக தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் தயாரிக்கப்படுகிறது.





