வட கரோலினாவில் ஜெட் விபத்தில் முன்னாள் பந்தய கார் ஓட்டுநர் உட்பட 7 பேர் மரணம்
வட கரோலினாவில்(North Carolina) நடந்த ஒரு ஜெட் விபத்தில், முன்னாள் பந்தய கார் ஓட்டுநர்(race car driver) உட்பட ஏழு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது என்று வட கரோலினா மாநில நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்ததாக கூறப்படும் நபர்களில் ஓய்வுபெற்ற NASCAR பந்தய ஓட்டுநர் கிரெக் பிஃபிள்(Greg Piffle), அவரது மனைவி கிறிஸ்டினா க்ரோசு பிஃபிள்(Christina Gross Piffle) மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில், விபத்து குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.





