இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரிப்பு
டித்வா புயலினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், 190 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (7) மதியம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனர்த்தங்களால் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன.
கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 232 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





