ஹொங்கொங் மக்களை கண்காணிக்க 60,000 AI கண்காணிப்பு கேமராக்கள்
ஹொங்கொங்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைந்த 60,000 கண்காணிப்பு கேமராக்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2028ஆம் ஆண்டுக்குள் அவை நிறுவப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.தற்போது நகரின் நிதி மையத்தில் ஏற்கனவே 4,000 CCTV கேமராக்கள் உள்ளன.
இது காவல்துறையின் குற்றவியல் எதிர்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.இந்த AI தொழில்நுட்பம் மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்கவும் குற்றவாளிகளை அடையாளம் காணவும் பயன்படுத்தப்படும் என பாதுகாப்புத் தலைவர் கிறிஸ் டாங், தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் ஹொங்கொங்கை சீனாவின் கண்காணிப்பு முறைமைக்கு நெருக்கமாக கொண்டுவரும் என கூறப்படுகிறது.
ஆனால், தனியுரிமை மீறல், தவறான கைதுகள், மற்றும் சட்ட மேற்பார்வையின்மையைப் பற்றிய கவலைகளும் எழுந்துள்ளன.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான தெளிவான விதிமுறைகள் ஹொங்கொங்கில் இல்லை என்பது விமர்சகர்களின் ஆதங்கமாகும்.ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளில் இப்படியான தொழில்நுட்பம் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.





