இலங்கை

தனிநபர்களின் பாதுகாப்பிற்காக 5,400 பாதுகாப்பு அதிகாரிகள் நியமனம்!

அமைச்சர்களாகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ இல்லாத தனிநபர்களின் பாதுகாப்பிற்காக மொத்தம் 5,400 பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம்  இன்று (06) கூடிய நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு விவரங்கள் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடையங்களுக்கு அமைய தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்