கடும் பனிமூட்டம் காரணமாக 4வது டி20 போட்டி ரத்து
பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்த சுற்றுப்பயணத்தில் இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் தொடரில் இந்திய அணி 2-1 கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இன்று உத்தரபிரதேச(Uttar Pradesh) மாநில தலைநகர் லக்னோவில்(Lucknow) நான்காவது போட்டி ஆரம்பமாக இருந்தது.
இந்நிலையில், கடும் பனிமூட்டம் காரணமாக போட்டி கைவிடப்பட்டதாக நடுவர்கள் குழு தெரிவித்துள்ளது.
மேலும், இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டி20 போட்டி 19ம் திகதி அகமதாபாதில்(Ahmedabad) உள்ள நரேந்திர மோடி(Narendra Modi) மைதானத்தில் நடைபெறவுள்ளது.




