ககோவ்கா அணை உடைப்பால் ஆபத்தில் உள்ள 42 ஆயிரம் பேர் : இரவுக்குள் உச்சத்தை எட்டும் வெள்ளம்!
டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த ககோவ்கா அணை இடிந்து விழுந்ததில் சுமார் 42 ஆயிரம் பேர் ஆபத்தில் இருப்பதாகவும், இன்று இரவுக்குள் வெள்ளம் உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அத்துமீறலின் விளைவாக தெற்கு உக்ரைனில் உள்ள மக்களுக்கு “கடுமையான மற்றும் தொலைநோக்கு விளைவுகள்” ஏற்படும் என்று ஐ.நா உதவித் தலைவர் எச்சரித்துள்ள நிலையில், இந்த மதிப்பீடு வந்துள்ளது.
அதேநேரம் இது மக்கள் தங்கள் வீடு, உணவு, பாதுகாப்பான நீர் மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டியேற்படும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரான மார்ட்டின் க்ரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.
“பேரழிவின் தீவிரம் வரும் நாட்களில் மட்டுமே முழுமையாக உணரப்படும்,” என்றும் அவர் கூறினார். ஆரம்பத்தில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை, ஆனால் அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி வெள்ளம் “பல இறப்புகளை” ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவும், உக்ரைனும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், இதன் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.