ஆந்திரப் பிரதேசத்தில் மோந்தா புயல் காரணமாக 3 பேர் மரணம்
ஆந்திரப் பிரதேசத்தில் மோந்தா(Mondha) புயல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோந்தா புயல் காரணமாக 87,000 ஹெக்டேர் பரப்பளவில் விளைநிலங்கள் மற்றும் பயிர்கள் சேதமாகியுள்ளது. 1,825 கிராமங்களில் 78,796 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சூறாவளி காரணமாக 107 ரயில்கள், 18 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மோந்தா புயல் ஆந்திராவின் காக்கிநாடா – மசூலிப்பட்டினம்(Kakinada and Masulipatnam) இடையே அந்தர்வேதிபாளையம்(Antarvedipalayam) என்னும் இடத்தில் கரையை கடந்தபோது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மோந்தா புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி





