போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் 3 இந்திய மாணவர்களும் அடங்குவர்
ஆஸ்திரேலியாவின்(Australia) சிட்னியின்(Sydney) போண்டி(Bondi) கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த 40 பேரில் மூன்று இந்திய மாணவர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாணவர்களில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தி ஆஸ்திரேலியா டுடே(The Australia Today) செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக காயமடைந்த இந்திய மாணவர்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
தொடர்புடைய செய்தி
அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூடு – துப்பாக்கிதாரி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்





