மொட்டுக் கட்சியை சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட கொடுப்பனவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 21 உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தின் பலமான ஒருவரின் தலையீட்டினால் மாதாந்த கொடுப்பனவாக தலா இரண்டு இலட்சம் ரூபா வழங்கப்படுவதாக லங்காதீப தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பலம் வாய்ந்த உறுப்பினர் ஒருவரின் தலையீட்டின் ஊடாக இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக அந்த கட்சியின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொடுப்பனவு பெறும் குழுவில் இரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.





