சோமாலியாவில் 20 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான சோமாலியாவில் அல் ஷபாப், ஐஎஸ், அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த குழுவை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான நடவடிக்கையில் சோமாலியாவுக்கு உகாண்டா பாதுகாப்பு படையினரும் உதவி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் ஷபிலி நகரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் அல்ஷபாப் பயங்கரவாதிகள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
(Visited 10 times, 1 visits today)