தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 இலங்கையர்கள் மரணம் – அதிர்ச்சியில் பயணிகள்

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் இருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்துக்கு அலையன்ஸ் ஏர் விமானம் நேற்று காலை புறப்படத் தயாராக இருந்த நிலையில், விமானத்தில் பயணிக்க வந்த இலங்கையை சேர்ந்த சிவகஜன்லிட்டி என்ற 43 வயதுடைய பயணி பாதுகாப்பு சோதனை பிரிவில் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இந்த நிலையில் கொழும்பில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் சென்னைக்கு நேற்று வந்தது. அந்த விமானத்தில் வந்த இலங்கையை சேர்ந்த ஜெயக்குமார் என்ற 48 வயதான பெண் குடியுரிமை சோதனையை முடித்துவிட்டு, சுங்கச்சோதனை பிரிவுக்கு வந்து கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இருவரின் உடல்களையும் பொலிஸார் மீட்டு, பிரேதபரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே நாளில் இரு பயணிகள் உயிரிழந்தது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SR

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!