ஆந்திராவில் 10 ரூபாய் தர மறுத்த முதியவரை கொன்ற 17 வயது இளைஞன்
ஆந்திர பிரதேசத்தில்(Andhra Pradesh) மதுபானம் வாங்க பணம் கொடுக்க மறுத்ததால், ஒரு இளைஞன் தனக்கு அறிமுகமில்லாத ஒருவரைக் கொன்றதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதையில் இருந்ததாகக் கூறப்படும் 17 வயது இளைஞன், மதுபானக் கடை அருகே 49 வயது டாடாஜி(Tataji) என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவரை அணுகி மது வாங்க பணம் கேட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
“மது வாங்க 10ரூபாய் கொடுக்க மறுக்கப்பட்டதால், அந்த நபர் ஒரு இளைஞரால் கொல்லப்பட்டார்” என்று ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் டாடாஜி சிறுவனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது, அதன் பிறகு மதுக்கடையிலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் கத்தியை எடுத்து அவரை குத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.





