வடகிழக்கு பிரேசிலில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் வடகிழக்கில் பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
30 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து பெர்னாம்புகோ (Pernambuco) மாநிலத்தில் விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பதினொரு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.
விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பெடரல் நெடுஞ்சாலை காவல்துறை (Federal Highway Police) தெரிவித்துள்ளது.
(Visited 5 times, 1 visits today)