12,000க்கும் அதிகமான குடியேறிகளை வெளியேற்றிய மலேசியா!
மலேசியாவில் இருந்து 12,380 கள்ளக்குடியேறிகள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து மார்ச் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மலேசியக் குடிநுழைவுத் துறைத் தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜூசோ (Ruslin Jusoh) அந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர்களில் 9,000க்கும் அதிகமானோர் ஆண்கள். எஞ்சியவர்கள் பெண்கள். பெரும்பாலானவர்கள் பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, மியன்மார் முதலிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தரை, ஆகாயம், கடல் வழிப் பயணங்களில் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
இன்னும் 11,650 கள்ளக் குடியேறிகள் தற்காலிக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் ருஸ்லின் கூறியுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)