வாழ்வியல்

இலகுவாக உடல் எடையைக் குறைக்க 10 எளிய வழிகள்

வாழ்க்கை முறையில் எளிய மற்றும் நிலையான மாற்றங்களைச் செய்வதன் மூலமே சாதாரணமாக உடல் எடையைக் குறைக்க முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

4 மாதங்களில் 25 கிலோ எடையைக் குறைத்த அனுபவம் கொண்ட உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அமாகா என்பவர், உடல் எடையைக் குறைப்பதற்கான 10 முக்கிய வழிமுறைகளைப் பகிர்ந்துள்ளார்.

  • நீங்கள் பசியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், குறைவான கலோரி அளவில் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
  • உங்கள் உணவில் 80% சிக்கன், மீன், முட்டை, பீன்ஸ் மற்றும் காய்கறிகள் போன்ற அதிக புரதம், அதிக நார்ச்சத்துள்ள உணவுகளாக இருக்கட்டும். இது பசியைக் கட்டுப்படுத்தி அதிக கலோரிகளை எரிக்க உதவும். மீதமுள்ள 20% உங்களுக்குப் பிடித்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 8,000 முதல் 10,000 அடிகள் நடப்பது கொழுப்பை எளிதில் கரைக்க மிக முக்கியம்.
  • உடல் பருமனுக்கு உண்மையான எதிரி சர்க்கரைதான். சோடா, ஜூஸ் மற்றும் பேக்கரி உணவுகளைக் குறைத்தால், உடல் எடையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உணரலாம்.
  • தீவிரமான ஓட்டம் போன்ற கார்டியோ பயிற்சிகளைவிட, எடை தூக்கும் (Weight Training) பயிற்சிகள் கொழுப்பை வேகமாகக் கரைக்கும்.
  • சரியான தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். தூக்கமின்மை மன அழுத்தத்தை அதிகரித்து, பசியைக் கொடுத்து, வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கும்.
  • உணவுக்கு முன்னும் பின்னும் தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து, அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்கும்.
  • தீவிரமாக எதிலும் ஈடுபடாமல், நிலையான மற்றும் தொடர்ச்சியான எளிமையான உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதே போதுமானது.
  • உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களை நேர்மையாகக் கடைப்பிடியுங்கள். ஒரு வாரத்தில் எவ்வளவு எடை குறைந்துள்ளது என்று அவ்வப்போது கவனம் செலுத்துங்கள்.
  • உடல் எடையைக் குறைப்பதில் பொறுமை மிகவும் அவசியம். முதலில் ஒரு மாதக் குறிக்கோளை வைத்துக்கொண்டு, அதனைத் தொடர்ந்து நீட்டித்துக் கொண்டே செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
(Visited 4 times, 4 visits today)

SR

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான