ஆஸ்திரேலியாவில் 12 லட்சம் பேருக்கு வேலை தேவை – பாதிப் பேருக்கு நாட்டமில்லை!
ஆஸ்திரேலியாவில் 2024-25 ஆம் ஆண்டில் வேலை தேவைப்படுவோரின் எண்ணிக்கை 1.2 மில்லியன் பேராக உயர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலிய புள்ளிவிவரப் பணியகம் (ABS) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், வேலை தேவைப்படும் 1.2 மில்லியன் மக்களில் அரைவாசிப் பேர் அதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இந்த எண்ணிக்கையில் அதிகமானவர்களாகப் பெண்களே உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 65 சதவீதமாகும்.
திருப்தியற்ற வேலை நிலைமைகள், பெற்றோரைச் சார்ந்திருத்தல் மற்றும் தொலைதூர வேலை வாய்ப்புகள் கிடைப்பது ஆகியவை இதற்குரிய காரணங்கள் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
அதேவேளை, வேலைச் சந்தையில் நிறுவன மாற்றங்கள் மற்றும் புதிய தலைமுறையின் பணி மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால் இந்தப் போக்கு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.





