வடகொரியாவில் கட்டப்பட்ட 10,000 புதிய நவீன வீடுகள்
வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கின் Hwasong District 10,000 புதிய நவீன வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கான விழா நேற்று இடம்பெற்றதாக KCNA செய்தி நிறுவனம் தெரிவித்தது.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும், அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளும் விழாவில் கலந்துகொண்டனர்.
வடகொரியா ஐந்து ஆண்டுகளில் புதிதாக 50,000 வீடுகளைக் கட்டும் திட்டத்தை 2021 ஆம் ஆண்டு அறிவித்தது.
அப்போதிலிருந்து இதுவரை வடகொரியாவில் பல்வேறு கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுள்ளன. நாட்டில் உணவுப் பற்றாக்குறை நீடிக்கும் சூழலில் வீடு கட்டும் பணிகளும் தொடர்கின்றன.
வடகொரியாவில் வீடுகளைக் கட்டும் திட்டத்துக்கு ஆக அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகத் தலைவர் கிம் சொன்னார். பியோங்யாங்கை உலகப் புகழ்பெற்ற நகராக மாற்றியமைக்கும் யோசனை இருப்பதாகவும் சொன்னார் அவர்.