ரஷ்யாவின் போர்க் குற்றங்களை விசாரிக்க மென்பொருளை பயன்படுத்தும் உக்ரைன்!
ரஷ்யாவின் போர்க்குற்றங்களை விசாரிக்க உக்ரைன் மென்பொருளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மென்பொருள் உளவுத்துறை தரவு மற்றும் செயற்கைக்கோள் படங்களை ஒருங்கிணைத்து எதிர்கால நிகழ்வுகளில் வரைப்படம் மூலமாக ஆதாரங்களை உருவாக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
,அமெரிக்க தரவு நிறுவனமான பலன்டிர் டெக்னாலஜிஸ் இன்கின் உதவுயுடன் குறித்த மென்பொருள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனில் ரஷ்யா படையெடுத்ததில் இருந்து 78,000 க்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





