மத்திய அரசின் பரிந்துரை கடிதத்தோடு தமிழக அரசை அணுகினேன்
ஆராய்ச்சி அதிகாரியாக நியமிக்க மத்திய அரசு பரிந்துரைத்தும் தமிழக அரசு தொடர்ந்து அலைகழித்து வருவதாக ஆராய்ச்சியாளர் கண்ணன் ஜெகதலா கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புவியீர்ப்பு விதிகள் குறித்தும், நோபல் விருது பெற்ற ஆராய்ச்சியாளர் ஐன்ஸ்டனின் விதிகள் குறித்தும் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மத்திய அரசிடம் அங்கிகாரம் பெற்று இருப்பதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆராய்ச்சி அதிகாரியாக பணியாற்ற சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து ஆராய்ச்சியாளர் கண்ணன் பலமுறை தமிழக அரசிடம் முறையிட்டும், இதுவரை ஆராய்ச்சி அதிகாரியாக நியமிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஆராய்ச்சியாளரை வரவேற்க தயாராக உள்ளோம் என தமிழக அரசு தொடர்ந்து கூறி வருவதாகவும், மத்திய அரசின் பரிந்துரை கடிதத்தோடு தமிழக அரசை அணுகினால் தொடர்ந்து அலைகழித்து வருவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.