பிரான்ஸ் சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள் – ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

பிரான்ஸில் சிறைச்சாலைகளின் கெள்ளளவை விட அதிகளவான கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளமையினால் அவர்களது சுகாதார நிலமைகள் கேள்விக்குறியாகியுள்ளது.
ஏப்ரல் 1 ஆம் திகதி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் படி, பிரெஞ்சு சிறைச்சாலைகளில் தற்போது 73,080 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது 120 சதவீதமான கொள்ளளவாகும். பிரெஞ்சு சிறைச்சாலைகளில் 60,899 கைதிகளுக்கான இடம் மட்டுமே உள்ளது.
இந்த நிலையில், மேலதிகமான கைதிகள் சிறைவைக்கப்பட்டிருப்பது அவர்களது சுகாதார நிலமைகளை கேள்விக்குறியாக்கியிருப்பதாக பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
50 சிறைச்சாலைகளில் 150% சதவீதத்துக்கும் அதிகமான கொள்ளவுடன் இருப்பதாகவும், எட்டு சிறைச்சாலைகளில் 200% சதவீதத்துக்கும் அதிகமான கொள்ளவுடன் உள்ளன.
புதிதாக 15,000 கைதிகளுக்கான சிறைச்சாலைகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும், கட்டுமானப்பணிகள் தாமதமாகிக்கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.