செய்தி

தேங்காய்களைக் கொள்வனவு செய்ய அவசரப்பட வேண்டாம் – இலங்கை மக்களிடம் கோரிக்கை

இலங்கையர்கள் அவசரப்பட்டு தேங்காய் கொள்வனவு செய்ய வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக்கொண்டுள்ளார்.

தேங்காய்களின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் என எவராலும் எதிர்வு கூற முடியாது. தேங்காய் தட்டுப்பாடு என்பதற்காக கலவரமடைய வேண்டாம் என அவர் அறிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேங்காயின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் என்று யாராலும் எதிர்வுகூற முடியாது. அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தோட்ட நிறுவனங்கள் ஊடாகவும், சதொச ஊடாகவும் தேங்காய்களை விநியோகித்துக் கொண்டே இருக்கின்றோம்.

தேங்காய் தட்டுப்பாடு என்பதற்காக கலவரமடைந்து அவசரப்பட்டு அவற்றைக் கொள்வனவு செய்ய வேண்டாம் என்று நுகர்வோரைக் கேட்டுக் கொள்கின்றோம்.

எவ்வாறாயினும் நாம் இதனை முகாமை செய்து கொண்டு பயணிக்கின்றோம் என்பது உண்மை. சில துறைகளில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

எனினும் அரசாங்கம் அவற்றுக்கான முழுமையான முயற்சியுடன் தலையிட்டு வருகிறது. இவை பருவ கால பிரச்சினைகளாகும். அவற்றுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி