ஜெர்மனியில் பண விநியோக இயந்திரங்களை தவிர்க்கும் மக்கள்
ஜெர்மனியில் பண விநியோக இயந்திரங்களின் சேவைகள் குறைவடைந்து வருகின்றன.
ஜெர்மனியில் கடந்த காலங்களில் பண இயந்திரங்களை குண்டு வைத்து தளர்த்தி பணங்களை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து காணப்படுள்ளது.
அதனால் வங்கி நடத்துனர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் பண விநியோக இயந்திரங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது.
இவ்வாறான கொள்ளை சம்பவங்களினால் பல வங்கிகள் தற்பொழுது இந்த பண இயந்திரங்களை தொடர்ந்து நடைமுறையில் கொண்டு வர முடியாது என்று முடிவெடுத்துள்ளது.
அதாவது படிப்படியாக பல அமைப்புகள் இந்த பண இயந்திரங்களுடைய எண்ணிக்கையை குறைத்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மட்டும் வங்கி ஒன்றானது தனது பண இயந்திரங்களுடைய தொகையை 10 சதவீதமாக குறைத்துள்ளதாக தெரிய வந்திருக்கின்றது.
மொத்தமாக கடந்த ஆண்டு இந்த இரண்டு வங்கிகளும் 1800 பண இயந்திரங்களை அந்த இடங்களில் இருந்து அகற்றியதாக தெரிய வந்திருக்கின்றது.
ஸ்பாகாசா என்ற வங்கியானது அதாவது 2021 ஆம் ஆண்டு 23 ஆயிரம் பண இயந்திரங்கள் கொண்டுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டில் இந்த தொகையானது 21,582 ஆக குறைவடைந்ததாகவும் தெரிய வந்திருக்கின்றது.
இதேவேளையில் இந்த வங்கிள் தன்னிச்சையான முறையில் இந்த பண இயந்திரங்களை இல்லாது செய்வதை தடுப்பதற்காக ஜெர்மன் அரசானது பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்றை கொண்டு வர உத்தேசித்துள்ளதாகவும் தெரிய வந்திருக்கின்றது.