ஆசியா செய்தி

சீன கண்ணிமையில் புழுக்களுடன் அவதிப்பட்ட நபர்! அதிர்ச்சியில் இணையவாசிகள்

சீனாவின் ஹீனானைச் சேர்ந்த நபரின் இடது கண்ணிமையில் புழுக்கள் இருந்தமையால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

லியு (Liu) என அழைக்கப்படும் அந்த நபர் அவற்றை எப்படியாவது நீக்கிவிட வேண்டும் என்பதற்காக இணையவாசிகளிடம் உதவி கேட்டுள்ளார்.

அவர் பல மருத்துவர்களின் உதவியை நாடினார். ஆனால் அவர் உதவி கேட்டுச் சென்ற அனைத்து மருத்துவர்களும் கையை விரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

லியு கண்ணிமையில் ஏதோ நகர்வது போன்று உணர்ந்துள்ளார்.

நாட்கள் செல்லச் செல்ல வலியும் வேதனையும் அவரை வாட்டி வதைத்தன. கண்ணிமையை அவர் கூர்ந்து பார்த்தபோது அதில் புழுக்கள் இருந்தது தெரியவந்தது.

அதன் பின்னர், லியு உடனடியாக மருத்துவரை நாடியதாகக் கூறப்படுகிறது.

அவர் அணுகிய மருத்துவர் ஒருவர் அவரது இடக் கண்ணிமையில் ஒட்டுண்ணிகள் வளர்ந்திருந்ததாகக் கூறியதோடு அதற்குத் தீர்வு ஏதும் இல்லை எனச் சொன்னதாக SCMP செய்தி நிறுவனம் தெரிவித்தது. லியு வேறு மருத்துவமனைகளை அணுகினார்.

ஆனால் எதுவும் அவருக்குச் சாதகமாக அமையவில்லை. அவருக்குக் கிடைத்த பதில்களில் மாற்றம் இல்லை.

அவரது பிரச்சினைக்குத் தீர்வு ஏதும் கண்டறியப்படவில்லை.

இறுதியில் வேறு வழியின்றி மனம் தளர்ந்த லியு சமூக ஊடகத் தளங்களில் இக்கட்டான சூழ்நிலையை எடுத்துக் கூறியதோடு அதற்கான தீர்வு என்னவாக இருக்கும் எனக் கேட்டிருந்தார்.

அவரது கதை சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

(Visited 3 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி