சீனாவில் காதல் விடுமுறை அறிவித்த அரசாங்கம்
சீனாவில் மக்கள் தொகை சரிந்துள்ளமையினால் புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா எனும் கொடிய நோயின் தாக்கத்தின் காரணமாக 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்கள் தொகையை அதிகரித்துள்ளது.
மேலும் சமீப காலமாக குழந்தை பிறப்பு விகிதமும் குறைந்து வருகிறது.
இதனையடுத்து சீனாவில் மக்கள் தொகையை பெருக்க அந்நாட்டு அரசு ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே அமலில் உள்ள ஒரு தம்பதியினருக்கு, ஒரு குழந்தை என்ற திட்டம் தளர்த்தப்பட்டு 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணமாகாதவர்கள் எத்தனை குழந்தைகள் என்றாலும் பெற்றுக்கொள்ளலாம் என் சீன அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சீனாவில் ஏப்ரல் 1ம் திகதி முதல் 7ம் திகதி வரை 7 நாட்களுக்கு 9 கல்லூரிகளில் காதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காதல் விடுமுறையில் இருக்கும் மாணவர்கள் தங்கள் காதலியுடன் சுற்றுலா பகுதிகளுக்கு சென்று அந்த அனுபவங்களை டைரியில் எழுதியும், வீடியோவாகா பதிவு செய்து சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.