சீனாவில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் பலி!
சீனாவில் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை ஆகிய இரு இடங்களில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெய்ஜிங் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவித்தில் சிக்கியவர்களை மீட்பு பணியாளர்கள் பத்திரமாக மீட்டு வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் ஜெஜியாங் மாகாணம் ஜின்ஹுவா நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மரக் கதவுகள் தயாரிக்கப்படும் பகுதியில் பெயிண்ட் உள்ளிட்ட மூலப்பொருட்களால் தீ பரவியிருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி விசாரணை நடத்தப்படுகிறது.
தீவிபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





