சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரின் உதவியால் நேர்ந்த விபரீதம்

சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் ஒருவர் செய்த உதவியால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
போலியான பயிற்சிச் சான்றிதழ்களை பெற பணம் கொடுத்ததற்காக இயக்குனருக்கு மூன்று வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.
வெளிநாட்டு ஊழியர்களை எந்த வித தேர்வு மற்றும் பயிற்சி இல்லாமல் வேலைக்கு எடுக்க கட்டுமான பாதுகாப்பு பயிற்சி சான்றிதழ் தேவை.
இதனை போலியாக எடுத்து தருவதாக வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கூற, அதில் 2 சான்றிதழை 500 சிங்கப்பூர் டொக்கு வாங்கி தருமாறு இயக்குனர் பணம் செலுத்தியுள்ளார்.
இந்த போலியான சான்றிதழ்கள் வைத்துக்கொண்டு, வெளிநாட்டு ஊழியர்களின் Work permit அனுமதிகள் தொடர அனுமதிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சகம்கூறியுள்ளது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட இந்த குற்றங்களுக்காக, வாங் ஷெங் டிசைன் & பில்டின் இயக்குநரான கோ வொய் ஹின் என்ற அவருக்கு கடந்த வியாழன் அன்று தண்டனை வழங்கப்பட்டது.