சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெற புதிய நடைமுறை?
சிங்கப்பூரில் வெளிநாட்டவர் குடியுரிமை பெறவேண்டுமானால் அவருக்கு ஆங்கிலத் தேர்வை நடத்தவேண்டும் என கோரப்பட்டுள்ளது.
பல சிங்கப்பூரர்கள் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்பில் நடத்தப்பட்ட கருத்தாய்வில் கலந்துகொண்ட 500 சிங்கப்பூரர்களில் 80 சதவீதமானோர் குடியுரிமை பெற ஆங்கிலத் தேர்வு மேற்கோள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ளனல்.
மேலும் புதிய குடிமக்களுக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருக்கவேண்டும் என 52 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.
புதிய குடிமக்களுக்கு ஆங்கிலத்தில் பேச, வாசிக்க, எழுதத் தெரிந்திருக்கவேண்டும் என 41 சதவீதமானோர் குறிப்பிட்டுள்ளனர்.
புதிய குடிமக்கள் கொண்டிருக்கவேண்டிய ஆக முக்கியப் பன்புகள், பிறருடன் ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருப்பது அவசியம் என 51 சதவீதமானோர் குறிப்பிட்டுள்ளனர்.
சிங்கப்பூரின் பொருளியலுக்குப் பங்களிக்கவேண்டும் என 51 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர். சிங்கப்பூரில் குடும்பம் இருக்கவேண்டும் என 45 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர்.
சென்ற மாதம் நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட கருத்தின் தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டது.
செய்தி நிறுவனம் நடத்திய அந்த ஆய்வில் கலந்துகொண்டவர்கள் 18 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்களாகும்.