சிங்கப்பூரில் அறிமுகமாகும் நடைமுறை – கைகொடுக்க இணைந்த 53 அமைப்புகள்
சிங்கப்பூரில் சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்காக புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, அவர்கள் மறுபடி சமூகத்தில் இணைவதற்கு உதவும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகிறது.
மொத்தம் 53 அமைப்புகள் அதற்குக் கைகொடுக்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு Desistor Network என்று அந்தத் திட்டம் அழைக்கப்படுகிறது.
சிறையில் இருந்து விடுதலை அடைபவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும், அவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையைப் பின்பற்ற உதவுவதும் நோக்கம்.
திட்டத்தின்கீழ், விடுதலை அடைந்தவர்களை உரிய அமைப்புகளுடன் ஒருங்கிணைக்க ஏதுவாக புதிய Telegram வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துடன் இன்னும் சில திட்டங்களைச் சேர்த்து செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சி குறித்தும் ஆராயப்படுகிறது.
தற்போது சிறையிலிருந்து விடுதலையாவோரில் பத்தில் 4 பேர் 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் சிறைக்குத் திரும்புகின்றனர்.