சிங்கப்பூரில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை – அதிகரிக்கப்படும் கட்டணம்
சிங்கப்பூரில், புதிய நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, ஒருமுறைப் பயன்படுத்தித் தூக்கிவீசும் பைகளில் பொருள்களை வாங்கிச் செல்ல வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
மென்பானக் கலன்களைக் கண்டபடி வீசுவதற்கும் அது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மென்பானக் கலன்களுக்கும் போத்தல்களுக்கும் கூடுதலாக 10 காசு முன்கட்டணம் செலுத்தும் நடைமுறை 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடப்புக்கு வரும் என குறிப்பிடப்படுகின்றது.
வெற்றுக கலன்களை உரிய இடத்தில் கொடுத்துக் கூடுதல் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம்.
நிலைத்தன்மை வளங்கள் மசோதாவின் ஓர் அங்கமாக புதிய திட்டம் நடப்புக்கு வரும் என குறிப்பிடப்படுகின்றது.





