ஆசியா செய்தி

சட்ட அமைப்பை மாற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விமானப்படையினர்!

இஸ்ரேலின் சட்ட அமைப்பை மாற்றி அமைப்பது குறித்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்ச்சைக்குரிய பல திட்டங்களை அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய இஸ்ரேலிய விமானப்படையினர் பயிற்சிகளுக்கு சமூகமளிக்க மறுப்பதன் மூலம் எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெஞ்சமின் நெதன்யாகுவின் முன்மொழிவுகளின் நீதித்துறை அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்கு உள்ளான நெதன்யாகு, ஜனவரி மாதம் இஸ்ரேலின் பிரதமராக ஆறாவது முறையாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி