குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் ChatGPT
ஹொங்காங்கில் நபர் ஒருவர் குழந்தைக்குப் பெயர் வைக்கும்படி ChatGPT-இடம் கேட்டது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கணவரைப் பற்றி மனைவி இணையக் கருத்தரங்கில் குறைகூறியிருந்தார்.
பெயரைச் சுயமாக யோசிப்பதற்குக் கணவர் அலுத்துக்கொண்டதாகவும் அவர் தொழில்நுட்பத்தை நம்பியிருப்பதாகவும் பெண் குறிப்பிட்டுள்ளார்.
பிறக்கும் குழந்தைக்குச் சீனப் பெயர் வேண்டும். ஆண் பிள்ளை. அவன் புத்திசாலியாகவும் அழகாகவும் உயரமாகவும் இருக்கவேண்டும், என்று கணவர் ChatGPT-இடம் கேட்டதாக அவர் கூறியுள்ளார். ChatGPT 7 பெயர்களைப் பரிந்துரைத்தது.
பெயர் என்பது தனிப்பட்ட முடிவு. உங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுங்கள் என்றும் ChatGPT குறிப்பிட்டுள்ளது.
குறித்த நபருக்கு ChatGPT பரிந்துரைத்த சில பெயர்களைப் பிடித்திருந்தது.
நீங்கள் தான் அப்பாவா? ChatGPT தான் அப்பாவா? என்று தாம் கோபத்துடன் கூறியதாக மனைவி இணையக் கருத்தரங்கில் கூறினார்.
தொழில்நுட்பம் எவ்வாறு பெயர்களைத் தேர்ந்தெடுத்தது என்று இணையவாசிகள் சிலர் கலந்துரையாடலில் இறங்கினர்.