ஐ.எம்.எஃப்பின் உதவியை நேர்மறையான கோணத்தில் நோக்குமாறு வர்த்தக பேரவை வலியுறுத்தல்!
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை நேர்மறையான கோணத்தில் நோக்குமாறும், மறுசீரமைப்புச்செயன்முறைக்கு அவசியமான ஆதரவை வழங்குமாறும் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரிடமும் இலங்கை வர்த்தகப்பேரவை வேண்டுகோள்விடுத்துள்ளது.
அதுமாத்திரமன்றி சர்வதேச நாணய நிதியத்தினால் நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டிருக்கும் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு முன்னுரிமையளிக்குமாறு அப்பேரவை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் குறித்த பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் இடைநிறுத்தப்படும்பட்சத்தில் அதனை இலங்கையால் தாங்கிக்கொள்ளமுடியாது என்றும், மீண்டும் 18 ஆவது உதவிச்செயற்திட்டத்தை நாடமுடியாது என்றும் வர்த்தகப்பேரவை எச்சரித்துள்ளது.
எனவே தற்போதைய மறுசீரமைப்புச்செயன்முறைக்கு அனைத்துத்தரப்பினரும்