இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விசாரணைக்கு வரும் ரிட் மனு!

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை மே மாதம் 9 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சோபித்த ராஜகருணா மற்றும்  தம்மிக்க கனேபொலகே ஆகியோரைக் கொண்ட நீதியரசர் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துமாறு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேற்படி ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் பொலிஸார் சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இது தொடர்பில் எவ்வித செயற்பாடுகளும், எடுக்கப்படாமல் இருப்பதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நீதிமன்றிடம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை