உயரும் வெப்பநிலை இந்தியாவின் சில பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டன
40 செல்சியஸ் (104 ஃபாரன்ஹீட்)க்கும் அதிகமான வெப்பநிலை பதிவானதை அடுத்து, இந்தியாவின் சில பகுதிகளில் உள்ள பாடசாலைகளை அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு மூடியுள்ளனர்.
வெப்பநிலை இயல்பை விட 5 செல்சியஸுக்கு மேல் அதிகரித்ததால், குறைந்தபட்சம் இரண்டு மாநிலங்களாவது, வடகிழக்கில் திரிபுரா மற்றும் கிழக்கில் மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில், இந்த வாரம் பாடசாலைகளை மூட மாநில அரசாங்கங்கள் உத்தரவிட்டதாக தெரிவித்தன.
மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் ஏப்ரல் 13 ஆம் திகதி 40C (104F) மற்றும் ஏப்ரல் 14 அன்று 41C (105.8F) வெப்பநிலை பதிவாகியுள்ளது, இது வருடத்தில் இயல்பை விட 5 டிகிரி அதிகமாக இருந்தது என்று அம்மாநில அதிகாரி ஜி கே தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் பெப்ரவரியில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 29.54C 85.1F) ஐஎம்டி வானிலை பதிவுகளை வைத்திருக்கத் தொடங்கிய 1901 க்குப் பிறகு அதிகபட்சமாக இருந்தது.
மேலும் இந்தியாவிலும் அண்டை நாடான பாகிஸ்தானிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தீவிர வெப்பத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறுகின்றனர்.