இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்தும் விமானங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு

இலங்கையின் வான் பரப்பை பயன்படுத்தும் வெளிநாட்டு விமானங்கள் மூலம் வருடாந்த வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் கட்டணங்களை உயர்த்த துறைமுகங்கள், கடற்படை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி ஒரு கோடியே இருபது இலட்சம் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய கட்டணங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் நிலையில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த விமானக் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)