இங்கிலாந்தில் சேலையுடன் மாரத்தான் ஓடிய பெண்
இங்கிலாந்தில் மான்செஸ்டரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் சேலை அணிந்தபடி கலந்துகொண்ட இந்தியப் பெண் ஒருவர் மக்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளார்.
41 வயதான மதுஸ்மிதா ஜெனா தாஸ் என்ற மான்செஸ்டரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டார்.
இந்த போட்டியில் வித்தியசமான முறையில் சேலை அணிந்தபடி நான்கு மணி 50 நிமிடங்கள், ஓடி மதுஸ்மிதா ஓட்டப்பந்தயத்தை முடித்தார்.
அவர் ஓடிய தூரம் 42.5 கிலோமீற்றர்கள் ஆகும். சேலையுடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட மதுஸ்மிதாவுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.





