ஐரோப்பிய நாடொன்றை அச்சுறுத்தும் வெப்பம் – 40 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு
ஸ்பெயினில் மார்ச் மாதம் தொடக்கம் முதலே வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதில் நெடுஞ்சாலைகள் மற்றும் மத்திய நகரப் பகுதிகளில் வெப்ப அலையின் தீவிரம் அதிகரித்துள்ளது.
நகரங்களின் வெப்பநிலை சராசரியை விட 7 முதல் 13 டிகிரி வரை செல்சியஸ் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் ஸ்பெயினின் மத்திய பகுதிகள், தென்கிழக்கு பகுதிகள் மற்றும் கேனரி தீவுகளில் 30°க்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பதிவான அதிக அளவு வெப்பமாகும். வரும் நாட்களில் தீவுப் பகுதிகளில் 32 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து முர்சியாவில் 28 செல்சியஸ் மற்றும் ஜராகோசாவில் 24 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
பெரும்பான்மையான இடங்களில் வெப்ப காற்றின் அளவு அதிகரித்துள்ளதால் மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அதிகரித்து வரும் வெப்பத்தை தணிக்க மக்கள் கடற்கரை மற்றும் தனியார் நீச்சல் குளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.