வெளிநாடு ஒன்றில் பரிதாபமாக பலியான இலங்கை பெண்!

குவைத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குவைத் பிரஜையான 21 வயதுடைய இளைஞன் ஒருவர் பொறுப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்திய நிலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய இளைஞன் தைமா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக குவைத்தை தளமாகக் கொண்டியங்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 27 times, 1 visits today)